2015-07-14 16:02:00

சிறாரைப் பாதுகாப்பதற்கு பங்களாதேஷ் திருஅவை உறுதி


ஜூலை,14,2015. பங்களாதேஷில், அருள்பணியாளர், துறவிகள், பொதுநிலையினர் ஆகியோர், தங்களின் நிறுவனங்களில் சிறார்க்குப் பாதுகாப்பளிப்பதில் கவனம் செலுத்துமாறு, அந்நாட்டுத் தலத்திருஅவை கேட்டுக்கொண்டுள்ளது.

“திருஅவை, பாதுகாப்பான இல்லம்” என்ற தலைப்பில் கடந்த வாரத்தில் தேசிய அளவில் பயிற்சிப் பாசறை நடத்திய, பங்களாதேஷ் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி அவை, சிறாரைப் பாதுகாப்பது, திருஅவை நிறுவனங்களின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டுமென வலியுறுத்தியது.

இத்தகைய முயற்சி பங்களாதேஷில் முதன்முறையாக எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.

பங்களாதேஷில் ஏறக்குறைய 59 விழுக்காட்டுச் சிறார் பல்வேறு விதமான உரிமை மீறல்களை எதிர்கொள்கின்றனர் என்று அந்நாட்டின் சட்ட ஆலோசனை உதவி மையம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஆதாரம் : UCAN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.