2015-07-12 15:36:00

பரகுவாய் அதிகாரிகள் ஏழைகளிடமிருந்து கற்றுக் கொள்ள அழைப்பு


ஜூலை,12,2015. உடன்பிறப்பு உணர்வு, நீதி, அமைதி, அனைவருக்கும் மாண்பு நிறைந்த ஒரு சமுதாயத்தை அமைப்பது பற்றி முதலில் ஓர் இளைஞர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, மகிழ்வும், புலனின்பமும் ஒரே கூறானவை அல்ல. மகிழ்வாய் இருப்பதற்கு அர்ப்பணிப்பும், முயற்சியும் அவசியம். ஆனால் புலனின்பம் நிலையற்றது, தற்காலிகமானது. மகிழ்வு என்பது, ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவது குறித்து கனவு காண்பது. ஆதலால் இளையோர் தங்களிடம் உள்ள சிறந்தவைகளை வழங்குவதோடு, இவர்கள் தங்களின் தாத்தா பாட்டிகள் மற்றும் வயதானவர்களின் ஞானத்திலிருந்தும், தங்கள் வாழ்விலிருந்தும் கற்றுக்கொண்டதை, தங்கள் வயதையொத்த இளையோரிடம் பகிர்ந்து கொள்ளுமாறு கூறினார். முதியவர்கள் கற்பிக்கும் நல்ல காரியங்களைக் கேட்பதற்கு அதிகமான நேரத்தைச் செலவழியுங்கள். விசுவாசம் மற்றும் விழுமியங்களின் ஆன்மீக மரபின் பாதுகாவலர்கள் இவர்கள். செபத்தில் இயேசுவோடு நேரம் செலவழியுங்கள். இயேசுவிடம் தினமும் தொடர்ந்து செபியுங்கள். அவர் உங்களை ஏமாற்றமாட்டார். உங்கள் மக்களின் நினைவில் இருக்கும் இயேசு, உங்கள் ஏக்கத்தில் மகிழ்வான இதயத்தை வைத்திருக்கும் இரகசியமாவார். உடன்பிறப்பு உணர்வு, நீதி, அமைதி, அனைவருக்கும் மாண்பு நிறைந்த ஒரு சமுதாயத்தை அமைப்பது ஆகிய இந்த விழுமியங்களை வெறுமனே வார்த்தைகளால் பேசுவதைவிட, அவற்றை உங்கள் வாழ்வில் வாழ்வது முக்கியம். எதையும் வெறுமனே பேசிக்கொண்டிருப்பதால் பலனில்லை. நீங்கள் ஏதாவது சொன்னால், அதைச் செயல்படுத்துவதற்கு உங்களை அர்ப்பணியுங்கள். அதற்காகத் தியாகம் செய்யுங்கள். இளமை, உயரிய கருத்துக்களைக் கொண்ட காலம். ஆதலால் உண்மையான மகிழ்வு, உடன்பிறப்பு உலகை அமைப்பதற்கு உழைப்பதிலிருந்து பிறப்பதாகும். இளையோரின் சக்தி வீணாக்கப்படக் கூடாது. உரையாடல் நடத்தக் கற்றுக் கொள்ளுங்கள். ஏழைகளை வரவேற்று ஆதரியுங்கள். உலகுக்குப் போதிக்க வேண்டியவை இளையோரிடம் அதிகம் உள்ளன. மக்கள்மீது அன்பும், அவர்களுக்குச் சேவை செய்வதற்கு ஆர்வமும் எங்கு இருக்கிறதோ, அங்கே ஒவ்வொருவருக்கும் தேவையான அடிப்படை வசதிகளை அமைத்துக்கொடுக்க இயலும். இவ்வாறு பரகுவாய் நாட்டு பல்வேறு சமூகக் குழுக்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.     

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.