2015-07-09 16:23:00

கடுகு சிறுத்தாலும்.. : சிந்தனைபோல் வாழ்வு மாறுகிறது


ஆசிரியர் ஒருவர் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்கள் ஆர்வத்தோடு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஒரு மாணவர் மட்டும் பாடத்தைக் கவனிக்காது ஏதோ சிந்தனையில் இருந்தார். "பாடத்தைக் கவனிக்காமல் அப்படி என்ன சிந்தனையில் ஆழ்ந்திருந்தாய்" எனக் கேட்டார் ஆசிரியர். அதற்கு அம்மாணவர், தனது வீட்டில் அழகிய காளை ஒன்று இருப்பதாகவும், அதன் நினைவே தனக்கு எப்போதும் இருப்பதாகவும் கூறினார். ஆசிரியர் அவரிடம், "அதோ எதிரில் தெரியும் குன்றில் அமர்ந்து உன் அழகிய காளையைப் பற்றி எண்ணியபடி இரு" என்று கூறினார். அம்மாணவரும் தொடர்ந்து ஏழு நாட்கள் அக்குன்றின் மேல் அமர்ந்து, ஆழ்ந்து அதைப் பற்றியே எண்ணியபடி இருந்தார். அதன்பின் இப்படி இருப்பது அம்மாணவருக்கே வேண்டாம் என்று போய்விட மறுபடியும் பள்ளிக்குச் சென்றார். பள்ளிக்கு வந்தவர், வகுப்பறையின் வெளியிலேயே நின்று கொண்டிருந்தார். ஆசிரியர் அவரிடம், "உன் காளையைப் பற்றிய தியானம் முடிவடைந்துவிட்டால் வகுப்பு அறைக்குள் வரலாமே" என்றார். அதற்கு அம்மாணவர், "இனிமேல் நான் குன்றுக்குப் போகமாட்டேன், காளையையும் நினைக்கமாட்டேன், ஆனாலும் வகுப்பறைக்குள் என்னால் வரமுடியாது" என்றார். இப்பதிலால் ஆச்சரியம் அடைந்த ஆசிரியர் "ஏன்" எனக் கேட்டார். அதற்கு அவர் "எனது தலையின் இருமருங்கிலும் வளர்ந்துள்ள கொம்புகள் என்னை வகுப்பறைக்குள் நுழையவிடாமல் தடுக்கின்றன" என்றார்.

இடைவிடாது காளையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த மாணவருடைய மனம் அவரையும் காளையாகவே சிந்திக்கத் தூண்டியது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.