2015-07-06 16:07:00

உருது மொழியில் ‘இறைவா, உமக்கே புகழ்’ திருமடல்


உருது மொழியில் இறைவா, உமக்கே புகழ் புதிய திருமடல்

 

ஜூலை,06,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Laudato Si’- இறைவா, உமக்கே புகழ் என்ற புதிய திருமடல், முஸ்லிம்களுக்கு உதவும் நோக்கத்தில், அதனை உருது மொழியில் வெளியிடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்திற்கு எதிரான தெளிவான நடவடிக்கைகளை உலகம் தொடங்க வேண்டுமென்று வலியுறுத்தும் இத்திருமடல் விரைவில் உருது மொழியில் வெளிவர இருப்பதாகவும், மொழி பெயர்ப்புப் பணி இவ்வாரத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும் புனித கொலம்பன் மறைபோதக சபையின் அருள்பணி Liam O'Callaghan அவர்கள் கூறினார்.

பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் படைப்பின் ஒருங்கிணைப்பு அவையின்(JPIC) ஒருங்கிணைப்பாளரான அருள்பணி O'Callaghan அவர்கள், இறைவா, உமக்கே புகழ் திருமடல் உள்ளூர் மொழிகளில் வெளிவருவது இன்றியமையாதது எனவும், இம்மொழி பெயர்ப்புப் பணியை முடிக்க மூன்று மாதங்கள் எடுக்கும் எனவும்  கூறினார். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.