2015-07-02 16:11:00

மத்தியதரைக்கடலைக்கடக்கும் குடிபெயர்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு


ஜூலை,02,2015. போர்கள், மோதல்கள் அல்லது அடக்குமுறை காரணமாக மனச்சோர்வடைந்து, மத்திய தரைக் கடலில் ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்டு கடந்த ஆறு மாதங்களில் ஐரோப்பாவுக்குள் நுழைந்துள்ள குடிபெயர்வோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 37 ஆயிரம் என்று UNHCR ஐ.நா. புலம்பெயர்வோர் நிறுவனத்தின் புதிய அறிக்கை கூறுகிறது.

“ஐரோப்பாவுக்கு கடல் பாதை : குடிபெயர்வோர்க்கு மத்திய தரைக் கடல் மார்க்கம்” என்ற தலைப்பில் UNHCR நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், குடிபெயரும் மக்களால் ஐரோப்பாவும், அனைத்துலக சமுதாயமும், மனிதாபிமான அமைப்புகளும் எதிர்நோக்கும் சவால்களைக் குறிப்பிட்டுள்ளது.

கிரேக்கம், இத்தாலி, மால்ட்டா, இஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்து கிடைத்துள்ள தகவல்களின்படி, கடந்த சனவரி முதல் ஜூன்வரை கடல் பயணம் செய்துள்ள குடிபெயர்வோர் மற்றும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை 93 விழுக்காடு அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.

அதேசமயம், கடந்த ஏப்ரலில் அதிகமானோர் இப்பயணத்தில் இறந்தனர், ஆயினும் இந்த இறப்புகள், கடந்த மே, ஜூன் மாதங்களில் குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.