2015-07-01 16:47:00

‘இறைவா உமக்கே புகழ்’ திருமடலும் சிறாரும்-கர்தினால் டர்க்சன்


ஜூலை,01,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதிய திருமடல் ‘இறைவா உமக்கே புகழ்’(Laudato si'), சிறார் மற்றும் நம் பொதுவான இல்லத்தின் வருங்காலம் குறித்து எவ்வாறு பேசுகிறது என்பதை இச்செவ்வாயன்று விளக்கினார் கர்தினால் பீட்டர் டர்க்சன்.

நியுயார்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில், ஐ.நா.வின் குழந்தை நல அமைப்பான யூனிசெப் அலுவலகத்தில் உரையாற்றிய திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் டர்க்சன் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதிய திருமடலிலுள்ள முக்கிய கருத்துக்களைச் சுட்டிக்காட்டினார்.

நாம் வாழும் சுற்றுச்சூழலிலிருந்து மனித சமுதாயத்தைப் பிரிக்க முடியாது, மனித சமுதாயமும், இயற்கையியலும் ஒன்றே, காலநிலையில் ஏற்படும் மாற்றம் மறுக்க முடியாதது, மனிதச் செயல்களால் இது மோசமடைந்துள்ளது, நம் பிரச்சனைகளின் ஒழுக்கயியல் இயல்பை உறுதியாக நாம் களைய வேண்டும் என்பன போன்ற பலவற்றை விளக்கினார் கர்தினால் பீட்டர் டர்க்சன்.     

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.