2015-07-01 17:10:00

கடுகு சிறுத்தாலும் : மரியாதை, எப்பொழுதும் நன்மை பயக்கும்...


இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒருவர், ஒரு நாள் மாலை வேலை முடியும் தறுவாயில், இறைச்சி பதப்படுத்தும் குளிர்சாதன அறைக்குள் எதோ வேலையாக இருந்தபோது, எதிர்பாராதவிதமாய் அதன் தானியங்கி கதவு பூட்டிக்கொண்டுவிட்டது. உடனே பெரும் கூச்சலிட்டாலும் அவர் எழுப்பிய ஓசை வெளியே யாருக்கும் கேட்கவில்லை. மேலும், பெரும்பாலானோர் வேலை முடிந்து கிளம்பிவிட்டனர்…இன்னும் சிறிது நேரத்தில் குளிரில் உறைந்து இறக்கப் போகிறோம் என்று எண்ணி பயம் கொண்டார் அவர். அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது. உயிர் வந்தவராக வெளியே ஓடி வந்தார். தொழிற்சாலை காவலாளி நின்று கொண்டிருந்தார். மகிழ்ச்சியில் அவரைக் கட்டி தழுவிக் கொண்டார். அவரிடம் “நான் உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?” என்று கேட்டார்.

“சார். நான் இங்க 10 வருடமாக வேலை செய்றேன், நீங்க ஒருத்தர் மட்டும்தான் என்னையும் ஒரு மனுசனா மதிச்சு காலைல வணக்கம் சாயங்காலம் குட் பை ரெண்டும் சொல்றவர். இன்னிக்கி காலைல வணக்கம் சொன்னீங்க. ஆனா சாயங்காலம் உங்களோட குட் பை என் காதில் விழவில்லை. உடனே சந்தேகம் வந்து, உள்ள வந்து ஒவ்வொரு இடமாத் தேடினேன்…அப்போதான் உங்களைக் கண்டு பிடிச்சேன் …” என்றார்.

ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்திக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும் 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.