2015-06-27 15:40:00

குழந்தைகளின் ஏழ்மை அதிகரிப்பு குறித்து கத்தோலிக்க அமைப்புகள்


ஜூன்,27,2015. அண்மையில் பிரிட்டன் அரசு வெளியிட்ட புள்ளிவிவரப் பட்டியலில், பிரிட்டன் குழந்தைகளிடையே ஏழ்மை அதிகரித்துள்ளது குறித்த விவரம், கவலை தருவதாக உள்ளதென்று, அப்பகுதியின் பிறரன்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஏழ்மையால் வாடும் குழந்தைகளின் எண்ணிக்கை, பிரிட்டனில், 2013ம் ஆண்டில், 23 இலட்சமாக இருந்தது, 2014ம் ஆண்டில், 26 இலட்சமாக உயர்ந்துள்ளது என்று அரசு அறிக்கை கூறியுள்ளது.

இது குறித்து கவலையை வெளியிட்டுள்ள அந்நாட்டு கத்தோலிக்க பிறரன்பு அமைப்புகள், இத்தகைய ஏழ்மை நிலைகளில் வாழும் குழந்தைகள், தங்கள் சுயமதிப்பையும், வாழ்வில் நம்பிக்கையையும் இழக்கும் ஆபத்து உள்ளது என தெரிவித்துள்ளன.

ஏற்கனவே பல்வேறு சலுகைகளைக் குறைத்து, வரிகளை அதிகப்படுத்தியுள்ள இங்கிலாந்து அரசு, மேலும் கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பது, குழந்தைகளையே அதிகம் பாதிக்க உள்ளது என, கத்தோலிக்க பிறரன்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

ஆதாரம் : ICN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.