2015-06-27 16:00:00

அருள்சகோதரிகளுக்கு தங்கும் அனுமதியைப் புதுப்பிக்க மறுப்பு


ஜூன்,27,2015. பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக கல்விப் பணியில் ஈடுபட்டுவந்த வெளிநாட்டு அருள்கன்னியர்கள் மூவருக்கு தங்கும் அனுமதியை புதுப்பிக்க மறுத்துள்ளது பாகிஸ்தான் அரசு.

எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து இன மக்களுக்கும் கல்விப் பணியாற்றி, சமூக முன்னேற்றத்திற்காக உழைத்துவரும் பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த துறவு சபையின் அருள்கன்னியர்களுக்கு, தங்கும் அனுமதியை புதுப்பிக்க மறுத்ததற்கான காரணத்தை பாகிஸ்தான் அரசு தெரிவிக்க மறுத்துள்ளதைத் தொடர்ந்து, இதற்கான காரணத்தைக் கேட்டு, உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார், இஸ்லாமாபாத் ஆயர் ரூஃபின் ஆன்டனி.

பாகிஸ்தானிய இளையோரிடையே மத வேறுபாடின்றி பணியாற்றிவரும் தங்களை சட்ட அனுமதியின்றி வாழ்பவர்கள் போல் அரசு நடத்த விரும்புவது குறித்து, தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர் இந்த அருள்சகோதரிகள்.

‘புனித கன்னிமரி துறவிகள்’ என்ற சபையைச் சேர்ந்த இவர்கள், பாகிஸ்தான் நாட்டில் இரு கல்வி நிலையங்கள் வழியே, 3,300 இளையோருக்கு கல்வி கற்பித்துவருகின்றனர். 

ஆதாரம் : FIDES/வத்திக்கான் வானொலி.








All the contents on this site are copyrighted ©.