2015-06-26 15:55:00

திருத்தந்தையின் திருமடலுக்கு ‘சில்சிலா’ அமைப்பு ஆதரவு


ஜூன்,26,2015. பல்சமய உரையாடல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற விடயங்களில் இன்னும் ஆர்வமாக ஈடுபட திருத்தந்தை எழுதியுள்ள 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடல் ஊக்குவிக்கிறது என்று, பிலிப்பின்ஸ் நாட்டின் பல்சமய உரையாடல் அமைப்பான 'சில்சிலா' (Silsilah) கூறியுள்ளது.

கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே ஆக்கப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்ளும் நோக்கத்துடன், 1984ம் ஆண்டு நிறுவப்பட்ட சில்சிலா அமைப்பு, 'உரையாடல் வழி வாழ்வு' என்ற அடிப்படை நோக்கத்துடன் இயங்கி வருகிறது என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

இறைவனோடு உரையாடல், தனக்குள்ளே உரையாடல், அடுத்தவரோடு உரையாடல், இயற்கையோடு உரையாடல் என்ற நான்கு தூண்கள் மீது எழுப்பட்டிருக்கும் சில்சிலா அமைப்பின் பணிகளுக்கு, திருத்தந்தை வழங்கியுள்ள திருமடல், பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது என்று, இவ்வமைப்பினர் கூறுகின்றனர்.

கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் இணைந்து, படைப்பை எவ்விதம் காக்கமுடியும் என்ற உரையாடலில் ஈடுபடுவது, பொதுவான நன்மைக்கு வழிவகுக்கும் என்று சில்சிலா அமைப்பினர் வலியுறுத்துகின்றனர். 

ஆதாரம் :  Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.