2015-06-19 15:53:00

எவரெஸ்ட் மலைச்சிகரம் 3 செ.மீ. நகர்ந்துள்ளது - சீன ஆய்வு


ஜுன்,19,2015. ஏப்ரல் மாதம் நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தின் காரணமாக, எவரெஸ்ட் மலைச்சிகரம் மூன்று சென்டிமீட்டர் தென்மேற்காக நகர்ந்துள்ளது என சீனாவிலுள்ள ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்தினால் அந்த மலையின் உயரத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை என சீனாவின் தேசிய கணக்கெடுத்தல், வரைபடங்கள் மற்றும் புவிசார் தகவல்கள் நிர்வாகத் துறை அறிவித்துள்ளது.

நேபாளத்தில் 7.8 ரிக்டர் அளவுகொண்ட அந்தக் கடுமையான நிலநடுக்கத்தின் காரணமாக எட்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர், உடமைகளுக்கு பெரும் சேதமும் அழிவும் ஏற்பட்டன. அந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஏராளமான நிலச்சரிவுகளும், பனிசரிவுகளும் ஏற்பட்டன.

இந்நேரத்தில், தலைநகர் காட்மாண்டு தெற்கு நோக்கி இரண்டு மீட்டர்கள் நகர்ந்துள்ளது என நேபாள ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  

நேபாளத்தில் ஏற்பட்ட இந்தக் கடுமையான நிலநடுக்கத்துக்குப் பிறகு எவரெஸ்ட் மலைச்சிகரத்தின்மீது ஏறும் நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளன. 

ஆதாரம் : BBC /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.