2015-06-15 16:22:00

கடுகு சிறுத்தாலும் – அறிவுரைகளின் ஆழத்தை ஆராய்ந்தால்...


ஆபிரகாம் லிங்கன் அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் தேர்தலுக்காகத் தன்னை தயாரித்துக் கொண்டிருந்த சமயம் அது. அச்சமயத்தில் அவருக்கு ஒரு பெண் ஆலோசனை சொல்லி ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், லிங்கன் அவர்களே, நீங்கள்  ஒல்லியான தோற்றமுடையவர், உங்கள் கன்னத்தில் அம்மைத் தழும்புகள் இருக்கின்றன. எனவே நீங்கள் தாடி வைத்துக் கொண்டால் உங்கள் முகத் தழும்புகள் தெரியாது. உங்களின் தோற்றமும் மாறும். உங்களின் எடுப்பான தோற்றம் மற்றவர்களைக் கவரும் என்று அப்பெண் எழுதியிருந்தார். அதை வாசித்துப் பார்த்த அவரின் தேர்தல் பொறுப்பாளர்கள் அக்கடிதத்தைக் குப்பைத் தொட்டியில் போட்டனர். அதைப் பார்த்த ஆபிரகாம் லிங்கன் அவர்கள், அக்கடிதத்தை எடுத்து வாசித்துப் பார்த்து அதன்படி தாடி வளர்த்துக் கொண்டாராம். அதன்பின்னர் அவரது தோற்றமும் மாறியதாகச் சொல்கிறார்கள். ஆபிரகாம் லிங்கன் அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், தனக்கு ஆலோசனைக் கடிதம் எழுதிய அப்பெண்ணை நேரில் வரவழைத்து நன்றி சொன்னாராம்.

அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் யார் சொல்கிறார்கள் என்று பார்ப்பதைவிட, அந்த ஆலோசனையின் ஆழத்தை அலசுவது நல்லது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.