2015-05-29 16:16:00

இலங்கை விவசாயிகள் மத்தியில் புற்றுநோய் அதிகரிப்பு


மே,29,2015. இலங்கையில் Anuradhapura, Polonnaruwa, Monaragala ஆகிய மாவட்டங்களில் கல்லீரல் புற்றுநோய் மற்றும் கல்லீரல் தொடர்புடைய நோய்களால் பாதிக்கப்படும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.

வேதிய உரங்கள், நஞ்சு கலந்த பூச்சிக்கொல்லி மருந்துகள், குறிப்பாக glyphosate மருந்தே இந்த நோய்களுக்குக் காரணம் என்று மருத்துவர் Channa Jayasumana அவர்கள் தெரிவித்தார்.

20 வயதுடைய இளையோர் உட்பட விவசாயிகள் பலர் இந்நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று மருத்துவர் Jayasumana அவர்கள் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையே, இலங்கையில், போர் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் முடிந்திருக்கும் நிலையிலும் அங்கு மௌனப் போர் ஒன்று தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமெரிக்க ஆய்வு மையமான ஓக்லாண்ட் இன்ஸ்ட்டிட்யூட் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது.

தமிழர் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது இலங்கை அரசு திட்டமிட்ட வகையில் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டு வருவதாகக் கூறும் அந்த அறிக்கை, தமிழர் நிலங்களில் இராணுவக் குடியிருப்புகள் மற்றும் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக் காட்டியிருக்கிறது.

26 ஆண்டுகளாக இலங்கையில் தொடர்ந்த உள்நாட்டுப் போர் 2009ம் ஆண்டு முடிவடைந்த பின்னர், முதல் முறையாக அந்நாட்டின் மனித உரிமை நிலைப்பாடுகள் குறித்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

ஆதாரம் : AsiaNews  / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.