2015-05-29 16:07:00

AIF நிதி தகவல் குழுவின் 2014ம் ஆண்டுக்கான அறிக்கை


மே,29,2015. AIF என்று அழைக்கப்படும் திருப்பீடம் மற்றும் வத்திக்கான் நகர நாட்டின் நிதி தகவல் குழு, 2014ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை இவ்வெள்ளியன்று செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டது.

இந்த ஆண்டறிக்கையில் திருப்பீடம் மற்றும் வத்திக்கான் நாட்டின் 2014ம் ஆண்டின் நடவடிக்கைகள் மற்றும் நிதி விபரங்கள் பற்றி பரிசீலனை செய்துள்ளதாகத் தெரிவித்த இக்குழு வத்திக்கான் தலைவர்கள், அவர்கள் துறையோடு தொடர்புடைய வெளிநாட்டு அதிகாரிகளுடன் ஒத்துழைப்பை வளர்க்கவும், சட்டத்துக்குப் புறம்பே நடைபெறும் நிதி நடவடிக்கைகளைத் தடை செய்யவும் முயற்சித்து வருகின்றது என்று தெரிவித்துள்ளது.

தேசிய மற்றும் பன்னாட்டு நிதி அமைப்புகளோடு AIF குழுவின் ஒத்துழைப்பு விரிவாக்கப்பட்டிருப்பதால், AIF குழு தனது பணியை மேம்படுத்துவதற்கு அது உதவியுள்ளது என்று, இக்குழுவின் தலைவர் René Brülhart அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பணப் பரிமாற்ற விவகாரத்தில் கடந்த ஆண்டில் சந்தேகத்துக்குரிய 147 அறிக்கைகளைப் பெற்றதாகவும், 2013ம் ஆண்டில் இது 202 ஆக இருந்ததெனவும் கூறும் இக்குழுவின் அறிக்கை, பணம் தவறான வழியில் பரிமாற்றம் செய்யப்படுவதற்கு எதிரான வத்திக்கானின் விதிமுறைகள் உறுதியுடன் செயல்படுத்தப்படுவதை இது காட்டுகின்றது என்றும் கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.