2015-05-27 16:05:00

நவீன அடிமைத்தனத்தை முற்றிலும் ஒழிக்கவேண்டும்


மே,27,2015 நவீன அடிமைத்தனத்தை முற்றிலும் ஒழிக்க, தெளிவான, உறுதியான செயல்பாடுகள் தேவை என்று பிலிப்பின்ஸ் ஆயர் பேரவைத் தலைவர், பேராயர், சாக்ரடீஸ் வியேகாஸ் (Socrates Villegas) அவர்கள் கூறியுள்ளார்.

மே 14, Valenzuela என்ற நகரில், காலணிகள் செய்யும் ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 72 பேர் இறந்ததையடுத்து, Fides செய்திக்கு அறிக்கையொன்றை வெளியிட்ட பேராயர் வியேகாஸ் அவர்கள், பாதுகாப்பற்ற நிலையில் இளையோரும், பெண்களும் பணியாற்றும் கொடுமைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தொழில் நிறுவனங்கள் எத்தகையப் பாதுகாப்புச் சூழலில் இயங்குகின்றன என்பதை அரசு அடிக்கடி சோதனை செய்து, பாதுகாப்பற்ற நிறுவனங்களை உடனடியாக மூடவேண்டும் என்று பேராயர் வியேகாஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

"Walk Free Foundation" (WFF) என்ற நிறுவனம், 162 நாடுகளில் மேற்கொண்ட ஓர் ஆய்வில், நவீன அடிமைத்தனம் வெகுவாகப் பரவியுள்ள 12 ஆசிய நாடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்நாடுகளின் பட்டியலில், பிலிப்பின்ஸ் நாடு 98வது இடத்தில் உள்ளது என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.