2015-05-25 16:35:00

ஜெர்மனியில் அதிகரிக்கும் அகதிகள் மீதான தாக்குதல்


மே,25,2015. ஜெர்மனி நாட்டில் அகதிகள் மீதான இனவெறித் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அந்நாட்டு அரசுக்கு அனைத்துலக‌ மன்னிப்பு சபை கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

Amnesty International எனும் அனைத்துலக‌ மன்னிப்பு சபையைச் சேர்ந்த ஏறக்குறைய 500 உறுப்பினர்கள் ஜெர்மனியில் உள்ள Dresden நகரில்  கூடி ஆலோசனை மேற்கொண்டபோது,  ஜெர்மனியில் அதிகரித்து வரும் இனவெறி தாக்குதலுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விண்ணப்பிக்கப்பட்டது.

மேலும், ஜெர்மனியில் அரங்கேறும் இனவெறி தாக்குதல், மக்களின் அடிப்படை உரிமைகளை காக்க தவறிய அரசு அதிகாரிகள் ஆகியவை குறித்த ஆவணப்படம் ஒன்றை பிரித்தானியாவை சேர்ந்த அனைத்துலக‌ மன்னிப்பு சபை ஆய்வாளர்கள் குழு தயாரித்துள்ளது.

ஜெர்மனியில் நிகழ்ந்த மனித உரிமைகள் மீறல், அகதிகள் மீதான இனவெறித் தாக்குதல் தொடர்பாக இந்த‌ அமைப்பு சேகரித்துள்ள முக்கிய ஆதாரங்கள் 2016ம் ஆண்டு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : TamilWin /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.