2015-05-25 16:46:00

2025ல் இந்தியா, கடும் தண்ணீர் பற்றாக்குறையைச் சந்திக்கும்


மே,25,2015. இந்தியாவில் பெருகிவரும் தண்ணீர் தேவைக்கு ஏற்ப, உற்பத்தி இல்லை என்பதால்,  அடுத்த 10 ஆண்டுகளில், இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை நாடாக உருவெடுக்கும் என, சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வு நடத்தும் நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது.

நிலத்தடி நீரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ள இந்தியாவில், விவசாயத்திற்கென 70 விழுக்காட்டு அளவு நிலத்தடி நீரும், குடிநீர் உள்ளிட்ட இதர பயன்பாடுகளுக்கு, 80 விழுக்காட்டு அளவு நிலத்தடி நீரும் உபயோகிக்கப்பட்டு வருகிறது.

அதிகரித்து வரும் குடும்ப வருவாய், தொழில்துறைகளின் வளர்ச்சி, மாறி வரும் வாழ்க்கை பாணி போன்றவை, தண்ணீர் பற்றாக்குறைக்கான முக்கிய காரணங்கள் என சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வு நடத்தும் நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

ஆதாரம் :Dinamalar/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.