2015-05-21 15:11:00

கடுகு சிறுத்தாலும் – சண்டையிடுவதால் பயனடைவது யார்?


ஒரு காட்டில் ஒரு சிங்கமும் கரடியும் ஒன்றாகச் சேர்ந்து வேட்டையாடி ஒரு மானைக் கொன்றன. கொன்ற மானைப் பங்கு போடுவதில் சிங்கமும் கரடியும் பயங்கரமாகச் சண்டை போட்டன. வெகுநேரம் சண்டை போட்டதால் இரண்டும் களைப்படைந்து தரையில் சாய்ந்தன. வெகு தூரத்திலிருந்தே இவர்களின் சண்டையைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு குள்ள நரி, அந்த நேரம் பார்த்து அங்கு ஓடி வந்து அங்கிருந்த மானைத் தூக்கிகொண்டு ஓடியது. சிங்கமும் கரடியும் ஒன்றும் செய்ய இயலாமல் அதனைப் பார்த்தபடி கீழே தரையில் கிடந்தன. வேட்டையில் கிடைத்ததை நல்ல முறையில் பங்கு போட்டுக் கொள்ளாமல் வீணாகச் சண்டை போட்டு இரையை இழந்தோமே என்று இவை இரண்டும் வருத்தப்பட்டன. உண்மைதான். சண்டையும் சச்சரவும் சண்டையிடும் இரு தரப்பினருக்குமே ஒருபோதும் பயன்தருவதில்லை. அவை இருதரப்பினருக்குமே தீமையைக் கொண்டு வரும்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.