2015-05-18 16:23:00

காரித்தாஸ் : 'ஒரே குடும்பமாக,இயற்கையைப் பாதுகாப்போம்'


மே,18,2015. அனைத்து முன்னேற்றத்தின் இதயமாக, மனித குடும்பமும், மனித மாண்பும் இருக்கும் என்ற நோக்கத்தை முன்னிறுத்தி, அனைத்துலக காரித்தாஸ் அமைப்பின் உரோம் நகர் கூட்டம் நிறைவுக்கு வந்தது.

160 நாடுகளைச் சேர்ந்த, 400க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பித்த உரோம் கூட்டத்தில், புதியத் தலைவராக மணிலா கர்தினால் லூயிஸ் அந்தோணியோ தாக்லே அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், 'ஒரே குடும்பமாக, இயற்கையை பாதுகாத்தல்' என்ற வருங்காலத் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.

மக்களை மையமாக வைத்து தீட்டப்படும் திட்டங்கள் அனைத்தும், அனைத்து மக்களுக்கும் சரியான முறையில் சென்றடைந்தபின்னரே, அவை வெற்றிபெற்றதாக நாம் உரைக்கமுடியும் எனவும் காரித்தாஸ் அமைப்பின் அனைத்துலகக் கூட்டத்தின் இறுதி அறிக்கை வலியுறுத்திக் கூறுகின்றது.

பல நாடுகளிலிருந்து கிறிஸ்தவர்கள் அகதிகளாக வெளியேறுவது, சிரியா மற்றும் ஈராக்கில் கிறிஸ்தவர்கள் மீதான சித்ரவதைகள் தொடர்வது போன்றவை குறித்தும் இவ்வறிக்கையில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

ஆதாரம் : காரித்தாஸ்/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.