2015-05-18 16:15:00

இந்த ஆண்டில் 2,100 குழந்தைகள் டில்லியில் மாயம்


மே,18,2015. டில்லியில், இந்த ஆண்டு ஏப்., 15 வரை, 2,100க்கும் அதிகமான சிறுவர், சிறுமியர் காணாமல் போயுள்ளனர் எனவும், இவர்களில், 1,212 பேர் சிறுமியர், 956 பேர் சிறுவர்கள். எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த ஆண்டு இதுவரை காணாமல்போன சிறுவர் சிறுமியருள் 586 சிறுமியரும், 380 சிறுவர்களும் காவல்துறையின் தீவிர முயற்சியால், மீட்கப்பட்டுள்ளனர், ஏனைய 110 பேரை காவல்துறை தேடி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, டில்லியில், நாள்தோறும் ஏறக்குறைய‌, 20 குழந்தைகள் மாயமாகின்ற நிலையில், காணாமல்போவோரில், பெரும்பாலோர் சிறுமியர் என்பதால், அவர்கள் சமூக விரோதிகளிடம் சிக்கி, பாலியல் தொழிலாளியாக மாறும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

படிப்பில் பயம், குடும்பத் தகராறு, எந்நேரமும் படிக்கச் சொல்வதால் ஏற்படும் மன அழுத்தம், பெற்றோரின் கண்டிப்பு, கூடா நட்பு போன்றவற்றால், சிறுவர், சிறுமியர் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர் எனவும், பெரும்பாலும், குடிசைப் பகுதிகளில், வறுமையில் வாடும் குடும்பத்தில் இருந்துதான், அதிகமான குழந்தைகள் காணாமல்போகின்றன எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன..

ஆதாரம் : Dinamalar/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.