2015-05-14 14:57:00

கடுகு சிறுத்தாலும் – தன்வினைத் தன்னைச் சுடும்


ஓர் ஓவியர் தனது கண்காட்சியில் தன்னுடைய ஓவியங்களைப் பார்வைக்கு வைத்திருந்தார். அப்போது அவரது ஓவியங்களைப் பார்ப்பதற்கு ஓர் இளைஞர் வந்தார். அரசவைப் பதவியிலிருந்த அந்த இளைஞரின் தந்தை இந்த ஓவியரை சிறு வயதில் ஏமாற்றியவர். அந்த இளைஞர் எல்லா ஓவியங்களையும் பார்வையிட்ட பின்னர் ஓர் ஓவியத்தை வாங்குவதற்கு முடிவு செய்தார். ஆனால் அந்த ஓவியர், இளைஞர் தேர்ந்தெடுத்த அந்த ஓவியத்தை ஒரு துணியால் போர்த்தினார். பின்னர் அந்த இளைஞரிடம், இது விற்பனைக்கு அல்ல என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார். அந்த  இளைஞர் தனது தந்தையிடம் சொல்ல, அவரது தந்தையும் ஓவியரிடம் சென்று அந்தக் குறிப்பிட்ட ஓவியத்துக்கு ஒரு பெரிய தொகையை அளிப்பதாகவும், அதனை தனது மகனுக்கு விற்குமாறும் வேண்டினார். ஆனால் ஓவியர் எதற்கும் வளைந்து கொடுக்காமல், இது என்னுடைய ஓவியம் என்றார். அவ்விருவரும் கவலையோடு திரும்பினர். இந்த ஓவியர் ஒவ்வொரு நாளும் காலையில் இறைவனை வரைவதே அவருடைய வழிபாட்டுமுறையாக இருந்தது. ஆனால் இவர் அந்த இளைஞருக்கு அந்த ஓவியத்தை விற்க மறுத்த நாளிலிருந்து அவர் காலையில் தீட்டும் ஓவியங்கள் வித்தியாசமாக இருப்பதைக் கண்டார். ஒருநாள் காலையில் அவர் வரைந்த ஓவியத்தில் அவருடைய கடவுள் உருவம் தெரியாமல், அந்த அரச அதிகாரி போன்ற உருவம் தெரிந்தது. அவர் அதைக் கிழித்து எறிந்தார். என்னுடைய பழிக்குப்பழி என் தலைக்கே திரும்பிவிட்டது என்று தன்னையே நொந்து கொண்டார். ம‌ன்‌‌னி‌ப்பு தவறை‌க் குறை‌க்கு‌ம். தவறை ‌நியாய‌ப்படு‌த்துவதா‌ல் அது இர‌ட்டி‌ப்பாகு‌ம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.