2015-05-12 16:01:00

கோவில் உச்சியிலுள்ள சிலுவைகளை அகற்ற சீன மாநில அரசு உத்தரவு


மே,12,2015. சீனாவின் Zhenjiang மாநிலத்தில், கோவில்களின் உச்சியில் சிலுவைகள் வைக்கப்படுவதைத் தடைச் செய்யும் புதிய சட்டத்திற்கு அனுமதி அளிக்க, அரசு முன்வந்துள்ளது.

அரசின் இப்புதிய சட்ட முயற்சி குறித்து கருத்து வெளியிட்ட வல்லுனர்கள், அண்மைக்காலங்களில் சீனாவில் கிறிஸ்தவம் வளர்ந்துவருவது குறித்து அரசு அஞ்சுவதாலேயே இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தெரிவித்தனர்.

கோவில் உச்சிகளிலிருந்து சிலுவைகளை அகற்ற அனுமதிக்கும் சட்டம் தற்போதுதான் அமலுக்கு வருகின்றபோதிலும், கடந்த ஆண்டே Zhenjiang  மாநில அரசு, சிலுவைகளை, கட்டாயமாக அகற்றத் துவங்கி, இதுவரை 448 கோவில்களில் இதை நிறைவேற்றியுள்ளதாகவும் அமெரிக்க மனித உரிமைகள் அமைப்பு ஒன்று கூறுகிறது.

கடந்த ஆண்டே சீன கத்தோலிக்க தலைவர்களுடன் உரையாடல் நடத்திய சீன அதிகாரிகள், சீனக் கிறிஸ்தவ சபைகள் எவ்வித வெளிநாட்டு தாக்கங்களும் இன்றி சீனக் கலாச்சாரத்தோடு ஒத்திணங்கிச் செல்ல வேண்டும் என அறிவித்திருந்தனர். 

ஆதாரம் : Catholic Online /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.