2015-05-12 15:05:00

கடுகு சிறுத்தாலும் - சொல்வீரர்களான சோம்பேறிகள்


பூங்காவிலே படுத்துறங்குவதும், பத்திரிகை வாசிப்பதும், வேளாவேளை வீட்டுக்குச் சென்று வயிற்றை நிரப்புவதையுமே தனது வாடிக்கையாகக் கொண்டிருந்த ஓர் இளைஞரிடம், ஏன் வேலை செய்வதில்லை என்று பெரியவர் ஒருவர் கேட்டார். தனக்கு ஏற்ற வேலை எவரும் தரவில்லை என்றார் அந்த இளையவர். “பூங்காவுக்கு அருகிலேயே கட்டப்படும் கட்டடத்தில், கூலிவேலைகளுக்கு ஆட்கள் தேவையாக உள்ளனரே, போகவில்லையா?” என்று கேட்டார் பெரியவர். “சென்ற மாதம் ஒருவர் வேலை செய்யும்போது விழுந்து இறந்ததை பத்திரிகையில் வாசிக்கவில்லையா? அங்கு வேலை செய்யும்போது நான் விழுந்தால் என்னாவது?” என்று பதில் கேள்வி கேட்டார் இளையவர். பெரியவர் தொடர்ந்து கேட்டதற்கெல்லாம் இளையவர் இவ்விதம் நழுவல் பதில்களையே கொடுத்தார். வெளிநாட்டு வேலையைப் பற்றி பேசினால், இளையவர் ஒருவேளை ஆர்வம் காட்டுவார் என எண்ணியவராக, “வெளிநாடு செல்வதற்கு நீ முயற்சிக்கலாமே!” என்று சொன்னார் பெரியவர். இளையவரோ, “கடந்தவாரம் இடம்பெற்ற விமான விபத்திலே எண்பத்தாறுபேர் உயிரிழந்ததை வாசிக்கவில்லையா? நான் வெளிநாட்டுக்குச் செல்லும்போது, அந்த விமானம் விபத்துக்கு உள்ளாகி விழுந்தால் என்னாவது?” என்றார்! (சத்திய வசனம் – இந்தியா இணையதளம்)

“வீதியில் சிங்கம் இருக்கிறது: வெளியே சிங்கம் அலைகிறது” என்று சொல்லிக்கொண்டிருப்பவர் சோம்பேறி. (நீதிமொழிகள் நூல் 26: 13)

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.