2015-05-11 16:34:00

கடுகு சிறுத்தாலும் – துன்பங்கள் மத்தியில் மகிழ்வாய் வாழ..


ஒரு கிராமத்தில் வாழ்ந்த மக்கள் எல்லாரும் தங்கள் தங்கள் துன்பம்தான் பெரியது என்று மனம்நொந்து கண்டபடி கடவுளைத் திட்டினார்கள். அதனால் கடவுள் ஒரு நாள் அவர்களிடம், நீங்கள் எல்லாரும் அவரவர் கஷ்டங்களை மூட்டையாகக் கட்டி மறுநாள் மாலை 7 மணிக்குள் கோவிலில் கொண்டுவந்து போடுங்கள் என ஆணையிட்டார். ஊர் மக்கள் எல்லாரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்கள் கவலைகளை மூட்டையாகக் கட்டிக்கொண்டு கோவிலுக்கு வந்தனர். கோவில் கதவு சாத்தப்பட்டது. கடவுள் சொன்னார் - இப்போது விளக்குகள் அணையும். உங்கள் துன்ப மூட்டையைப் போட்டுவிட்டு வேறு மூட்டையை எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது உங்களுக்குப் பிடித்த மூட்டையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று. கடவுள் தாம் சொன்னபடி விளக்குகளை அணைத்தார். எல்லாரும் அவரவர் மூட்டையை வீசிவிட்டு டபக்கென்று தாங்கள் வீசிய அதே மூட்டையையே எடுத்துக் கொண்டனர். மீண்டும் விளக்கு எரிந்ததும், அப்பாடா, நல்லவேளை இது எனது மூட்டை, அதே மூட்டை, என்று ஒவ்வொருவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அப்போது ஒருவர், ஏன், நீங்கள் வேறு ஒரு மூட்டையை எடுத்திருக்கலாமே என்று கேட்டார். அதற்கு அவர், சும்மா இருய்யா... எனக்கு ஆஸ்துமா.. இந்த மூட்டையைப் போட்டுட்டு வேற மூட்டையை எடுத்து அதில் எய்ட்ஸ் இருந்தா என்ன பண்ணறதாம் என்று சொன்னார்.

ஆதாரம் :   வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.