2015-05-08 15:31:00

கடுகு சிறுத்தாலும் – அடிபடுவதால் வெளுக்கப்படுகிறோம்


ஆற்றங்கரை ஓரத்திலிருந்த ஒரு கல்லின் மேல் தான் கொண்டு வந்திருந்த அழுக்குத் துணிகளை அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தார் ஒரு சலவைத் தொழிலாளி. அழுக்குத் துணிகளைச் சுமந்துவந்த சலவைத் தொழிலாளியின் கழுதை, துணி துவைக்கப்படும் கல்லைப் பார்த்து, அழுக்கடைவது துணி; அதை வெளுக்கும்போது அடிபடுவது நீ, ஆகா, உன் தியாகமே தியாகம்! என்று புகழ்ந்தது. உடனே, கல், மன்னியுங்கள் கழுதையாரே, துணி வெளுக்கப்படும்போது நானும் வெளுக்கப்படுகிறேன் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள்! என்றது உண்மையை மறைக்க விரும்பாமல். அசடு வழிந்த கழுதை ஆற்றைப் பார்க்க, ஆறு கல்லைப் பார்த்து முணுமுணுத்தது - பிழைக்கத் தெரியாத தியாகி, பிழைக்கத் தெரியாத தியாகி! 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.