2015-05-08 15:44:00

இந்திய-பங்களாதேஷ் எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு


மே,08,2015. இந்தியாவுக்கும், பங்களாதேஷ் நாட்டுக்கும் இடையே 41 ஆண்டுகளாக நிலவி வந்த எல்லைப் பிரச்சனை வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்தியா-பங்களாதேஷ் எல்லை குறித்த 1974ம் ஆண்டு ஒப்பந்தத்தை அமல்படுத்தும் வகையில், அரசியல் அமைப்பில் இது குறித்த மாற்றத்திற்கு இந்திய நாடாளுமன்றம் இவ்வியாழனன்று ஒரே மனதாக ஒப்புதல் தெரிவித்தது. இதன் மூலம் இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கிட்டியுள்ளது.

இந்தியாவும், பங்களாதேசும் 4,096 கிலோ மீட்டர் நீள எல்லையைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றன. அசாம், திரிபுரா, மிசோரம், மேகாலயா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் பங்களாதேஷை ஒட்டி அமைந்திருக்கின்றன. வங்கதேசத்தின் பெரும் நிலப் பரப்புக்குள் இருக்கும் தஹலா காக்ரபரி பகுதி இந்தியாவுக்குச் சொந்தமானது. இந்தப் பகுதியைச் சூழ்ந்திருக்கும் பகுதி பங்களாதேஷிக்குச் சொந்தமானது. இப்படி குழப்பங்கள் இருந்து வந்தன.

92 பங்களாதேஷ் பகுதிகள் இந்திய எல்லைக்குள் அமைந்துள்ளன. நிர்வாக வசதிக்காக இவற்றை அந்தந்த நாடுகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்பதில்தான் சிக்கல்கள் நீடித்து வந்தன.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.