2015-05-07 16:41:00

Harlem Globetrotters வீரர்களைச் சந்தித்தத் திருத்தந்தை


மே,07,2015. கூடைப்பந்து விளையாடுவதில் புகழ்பெற்ற Harlem Globetrotters என்ற குழுவின் வீரர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் மறைக்கல்வி உரையின்போது சந்தித்தார்.

விளையாட்டுத் திறன், நகைச்சுவை, மேஜிக் என்ற பல அம்சங்களை உள்ளடக்கிய இக்குழுவினரின் சீருடையில் ஒன்று, 'திருத்தந்தை பிரான்சிஸ் 90' என்ற பெயர் பொறித்து, அவருக்கு வழங்கப்பட்டது.

1926ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டுக் குழுவின் கண்காட்சிப் போட்டிகள் இதுவரை 120 நாடுகளில், 20,000த்திற்கும் அதிகமான முறை அரங்கேறியுள்ளன. திருத்தந்தை புதன் மறைக்கல்வி உரை வழங்க வருவதற்கு முன், இக்குழுவைச் சேர்ந்தவர்கள், புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பயணிகளுக்குத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

2000மாம் ஆண்டு, இக்குழுவினர், திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்களைச் சந்தித்த வேளையில், அவரை, தங்கள் குழுவின் மதிப்பிற்குரிய ஓர் அங்கத்தினராக இணைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்க, புனித பேதுரு வளாகம் வருவதற்கு முன், சாந்தா மார்த்தா இல்லத்தில், 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனுடையக் குழந்தைகளைச் சந்தித்து, ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்தார்.

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.