2015-05-05 16:12:00

காலநிலை மாற்றத்தால் உயிரினங்களில் 6ல் ஒன்று அழியும் அபாயம்


மே,05,2015. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு உலகத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்கத் தவறினால், உலகின் உயிரினங்களில் ஆறில் ஒன்று முற்றிலும் அழியும் ஆபத்தை எதிர்நோக்குவதாக புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

வருகிற டிசம்பரில் பாரிசில் காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா. உச்சி மாநாடு இடம்பெறுவதை முன்னிட்டு காலநிலை மாற்றம், விலங்குகள் மற்றும் தாவரங்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

இந்த உயிரினங்களின் இழப்பு, பொருளாதாரம், கலாச்சாரம், உணவுப் பாதுகாப்பு, நலவாழ்வு ஆகியவற்றைப் பாதிக்கும் எனவும் அவ்வறிக்கை எச்சரிக்கிறது. 

உலகில் 56,441 வனவிலங்குகள் அழிவின் விளிம்பில் உள்ளதாக ஐ.நா.வின் உலக சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு (UNEP) அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த அமைப்பு, 2014ம் ஆண்டு நடத்திய ஆய்வில்,  உலகில் 56,441 வனவிலங்குகள், 19,738 தாவரங்கள் என 76,179 உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

கொடி நாகம், இந்திய நீர் எருமை, குரைக்கும் மான், பச்சை ஆமை, ஆசியா யானை, ஆசியா காட்டுநாய், களக்காடு பாறை கெண்டை மீன், இந்திய எறும்புத் திண்ணி, சிறுத்தை, நீலகிரி பைபட், ஆசியா சிங்கம், புலி மற்றும் பனிச்சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் அழியும் தருவாயில் உள்ளன.

பிலிப்பைன்ஸ், நேபாளம், சீனா, இந்தோனேசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் வனவிலங்குகள் அதிகளவில் வேட்டையாடப்படுகின்றன.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.