2015-05-05 15:52:00

இரக்கத்தின் புனித ஆண்டு இலச்சினை


மே,05,2015. “வானகத் தந்தையைப் போல இரக்கமுள்ளவராய்(லூக்.6:36)” என்ற இரக்கத்தின் புனித ஆண்டு இலச்சினை, நாம் யாரையும் தீர்ப்பிடாமல் அல்லது கண்டனம் செய்யாமல் மன்னித்து வாழுமாறு நம்மைக் கேட்கும் நம் வானகத் தந்தையின் இரக்கப் பண்பைப் பின்செல்வதற்கு விடுக்கப்படும் ஓர் அழைப்பாக உள்ளது.

இரக்கத்தின் புனித ஆண்டு இலச்சினை இச்செவ்வாயன்று செய்தியாளர் கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த இலச்சினையை உருவாக்கியுள்ள இயேசு சபை அருள்பணி Marko I. Rupnik அவர்கள், இரக்கம் பற்றிய ஒரு சிறிய இறையியல் விளக்கத்தையும் இச்செய்தியாளர் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

இறைமகன், தமது தோள்களில் காணாமல்போன இதயத்தைத் தூக்கி வைத்திருப்பதுபோல் காட்சியளிக்கும் இந்த இலச்சினை, கிறிஸ்து மனித உரு எடுத்த நிலையின் உச்சகட்ட பேருண்மையை நிறைவு செய்யும் மீட்பில், அவரின் அன்பு  வெளிப்படுத்தப்படுவதைக் காட்டுகின்றது என்று அருள்பணி Rupnik அவர்கள் கூறினார்.

இந்த இலச்சினை, வாதுமைக் கொட்டை வடிவிலுள்ளது என்றும், இந்த வடிவம், தொடக்க கால மற்றும் மத்திய கால கிறிஸ்தவ வரைபடங்களில் முக்கியமானதாக இருந்தது என்றும் அருள்பணி Rupnik அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.