2015-05-04 16:13:00

வாரம் ஓர் அலசல் – நிலநடுக்கங்கள், ஒரு தகவல்


மே, 04,2015. அன்பு நேயர்களே, நிலநடுக்கங்கள் பற்றிய செய்திகளை அவ்வப்போது கேட்டு வருகிறோம். நேபாளத்தில் கடந்த ஏப்ரல் 25ம் தேதி 7.9 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை இத்திங்கள் காலை தகவல்படி ஏழாயிரத்து இருநூறைத் தாண்டியுள்ளது. இனியும் உயிருடன் யாரும் மீட்கப்படலாம் என்ற நம்பிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. ஏறக்குறைய 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 28 இலட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக அந்நாடு முழுவதும் 80 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறக்குறைய ஒரு இலட்சத்து 26 ஆயிரம் குழந்தைகளுக்கும் ஒரு இலட்சத்து 85 ஆயிரம் கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கும் மருத்துவச் சிகிச்சை, சத்துணவு தேவைப்படுகிறது. ஏறக்குறைய 42 இலட்சம் பேர் சுத்தமான குடிநீர் இன்றி தொற்றுநோய்த் தாக்கும் அபாயத்தில் உள்ளனர். 1 இலட்சத்து 6 ஆயிரம் வீடுகள் முழுமையாக இடிந்துள்ளன. 1 இலட்சத்து 43 ஆயிரம் வீடுகள் பகுதி அளவு சேதமடைந்துள்ளன. நேபாள நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்கு தினமும் நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. இஞ்ஞாயிறு அதிகாலையில் அடுத்தடுத்து மூன்று முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்படும்போது அடுத்த சில வாரங்களுக்கு இது மாதிரியான நில அதிர்வுகள் ஏற்படுவது வழக்கம். அதனால் மக்கள் பீதியடைய வேண்டாம் என நேபாள அரசு அறிவித்துள்ளது. இவ்வேளையில் நிலநடுக்கங்கள் பற்றி இன்னும் சற்று ஆழமாக அறிந்து கொள்வதற்கு உதவியாக, நிலநடுக்கங்கள் எப்படி ஏற்படுகின்றன என்று விளக்குகிறார் திருவாளர் என். இராமதுரை அவர்கள். இவர் மூத்த பத்திரிகையாளர் மற்றும் அறிவியல் கட்டுரைகளை எழுதி வருபவர்.

நேபாளத்தில் நிலநடுக்கம் எப்படி ஏற்பட்டது என்றும் சொல்கிறார் திருவாளர் என். இராமதுரை.

2004ல் இந்தியப் பெருங்கடலில் சுனாமி ஏற்பட்ட போதும் சரி, தற்போதைய நேபாள நிலநடுக்கத்தின் போதும் யுரேசியா பகுதி பற்றிப் பேசப்படுகின்றது. யுரேசியா பகுதி என்பது எது?

இந்திய துணைகண்டம், ஏறக்குறைய 4 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பா, ரஷ்யா, சீனா ஆகியவற்றை உள்ளடக்கிய யுரேசியாவுடன் தென்பகுதியில் வந்து ஒட்டிக்கொண்டது. கண்டங்கள் இடம் மாறுவது பற்றியும் பேசுகிறார் திருவாளர் என். இராமதுரை.

நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு அடிப்படையில் இந்தியா ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது பற்றியும் சொல்கிறார் திருவாளர் என். இராமதுரை.

பொதுவாக இயற்கைப் பேரிடர்கள் ஏற்படப்போகிறது என்பதை முன்பே அறியும் தவளைகள், பாம்புகள் போன்ற உயிரினங்கள், அதற்குப் பல மணி நேரத்துக்கு அவ்விடத்தைவிட்டு வெளியேறிவிடுகின்றன. ஆக, நிலநடுக்கத்திலிருந்து மனிதர்களாகிய நாம் நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது?

நிலநடுக்கங்கள் பற்றிய விரிவான தகவல்களைத் தந்த ஐயா என். இராமதுரை அவர்களுக்கு எம் நன்றி.

நேபாள அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் பால் சிமிக் அவர்கள் கோட்டுக்கொண்டதன்பேரில் கத்தோலிக்க காரித்தாஸ் பிறரன்பு நிறுவனத்தின் தலைமையில் நேபாளத்தில் பிற கிறிஸ்தவ சபைகளும் பிற மதங்களும் ஒன்று சேர்ந்து இடர்துடைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. நேபாளத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் நம் சகோதர சகோதரிகள், இதில் மதம் நம்மைப் பிரிக்கக் கூடாது, இந்தப் பேரிடர் உதவிகளை கத்தோலிக்கர் தலைமையேற்று நடத்துவது மகிழ்ச்சியளிக்கின்றது என்று காத்மண்டு Jame மசூதி இமாம் Mohammad Sannaulha அவர்கள் சொல்லியுள்ளார். அதேபோல் புத்தமத சமூகத்தின் பிரதிநிதி Renchen, இந்துமத சமூகத்தின் பிரதிநிதி Manohar Prasad Sah ஆகிய இருவரும் மதங்கள் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்துப் பேசியுள்ளனர். நேபாள இயற்கைப் பேரிடர் மதங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை வளர்த்து வருகின்றது. இப்பண்புகளில் நாமும் வளருவோம். மதம் கடந்த மனித நேயம் சிறந்தோங்கட்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.