2015-05-04 15:46:00

திருத்தந்தை : முழுமனித வளர்ச்சிக்கு சேவையாற்றுங்கள்


மே,04,2015. Congo நாட்டில் கத்தோலிக்கத் திருஅவை ஒரு வளர்ந்துவரும் திருஅவையாக உள்ளது என்றும், அங்கு அண்மையில் மூன்று புதிய மறைமாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது இதற்கான சான்று என்றும் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஐந்து ஆண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் ‘அத் லிமினா’ சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்த Congo நாட்டு ஆயர்களை, திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Congo தலத்திருஅவை அண்மைக் காலங்களில் பொதுநிலையினர்மீது அதிகக் கவனம் செலுத்தி மறைப்பணிகளை ஆற்றிவருவது குறித்தும் தன் பாராட்டுதல்களை வெளியிட்டார்.

குடும்பங்கள் மீதான மேய்ப்புப்பணி அக்கறை, கிறிஸ்தவத் திருமணங்கள் ஆகியவை பற்றியும் Congo ஆயர்களிடம் குறிப்பிட்ட திருத்தந்தை, ஆயர்களின் முதல் உடனுழைப்பாளர்களாகிய குருக்களின் கல்வியிலும் தயாரிப்பிலும் அதிகக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மனிதர்களின் முழுவளர்ச்சிக்கு, குறிப்பாக கல்வி, நல ஆதரவு போன்றவைகளுக்கும், அண்மை நாடுகளின் புலம் பெயர்ந்தோருக்கும் Congo தலத்திருஅவை அர்ப்பணத்துடன் ஆற்றவேண்டிய பணிகளையும் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.