2015-05-04 16:05:00

கடுகு சிறுத்தாலும்.. வாழ்வைத் திரும்பிப் பார்க்கத் தயாரா?


ஒரு நாள் சூஃபி ஞானி முல்லா நசுருதீன் அவர்களிடம் ஒருவர் வந்து ஒரு கிராமத்தின் பெயரைச் சொல்லி அங்குச் செல்ல எத்தனை நாள்கள் ஆகும் என்று கேட்டார். அதற்கு முல்லா அவர்கள், அது உங்களைப் பொறுத்தது என்றார். இது என்ன பதில், நேரடியாக நான்கு அல்லது ஐந்து நாள்கள் என்று சொல்ல மாட்டீரா? என்னைப் பொறுத்தது என்றால், எனக்கு ஒன்றும் பரியவில்லையே என்றார் வழிபோக்கர். அதற்கு முல்லா அவர்கள், ஐயா, தாங்கள் அந்த ஊரைக் கடந்து வந்து விட்டீர்கள், அது உமக்குப் பின்னால் இருக்கிறது, நீர் திரும்பினால் விரைவிலேயே போகலாம், அல்லது இப்போது நிற்கும் திசை வழியே பயணம் தொடர்ந்தால் உலகையே சுற்றிக் கொண்டு வந்துதான் அந்த ஊரை அடைய முடியும். இப்போது திரும்பும் எண்ணம் உமக்கு உண்டா இல்லையா என்பது எனக்கு எப்படித் தெரியும்? அதனால்தான் அது உங்களைப் பொறுத்தது என்றேன் என்றார். ஆம். நம்மில் எத்தனை பேர் கடந்து வந்த பாதையின் மேடு பள்ளங்களைத் திரும்பிப் பார்த்துப் பாடம் கற்கத் தயாராக உள்ளோம் 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.