2015-05-01 16:20:00

தொழில் கலாச்சாரம் உருவாக்கப்படுமாறு ஆயர்கள் அழைப்பு


மே,01,2015. மிகக் குறைந்த ஊதியம் பெறுகின்ற, உரிமைகளை இழந்துள்ள மற்றும் மதிப்பின்றி நடத்தப்படும் தொழிலாளர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ள அதேநேரம், தொழில் கலாச்சாரம் உருவாக்கப்படுமாறு அர்ஜென்டீனா ஆயர்கள் கேட்டுள்ளனர்.

மே,01, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட உலக தொழிலாளர் தினத்துக்குச் செய்தி வெளியிட்டுள்ள அர்ஜென்டீனா ஆயர்கள், மனிதரின் மாண்புக்கும், ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் தரமான வேலை இன்றியமையாதது என்றும், அனைத்து அரசியல் கட்சிகளும் இத்தகைய வேலை வழங்குவதற்குப் பாகுபாடின்றி செயல்படுமாறும் கூறியுள்ளனர்.

இலாபத்துக்குமுன் மனிதர் முதலிடத்தில் வைக்கப்பட வேண்டுமென தொழில் அதிபர்களைக் கேட்டுள்ள ஆயர்கள், மாண்புடைய தொழில், நீதி நிறைந்த சமுதாயத்தை உருவாக்கும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும், நேபாளத்தில் இடர்துடைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள், கிராமங்களுக்குச் சென்று உதவுவதற்கு மேலும் கெலிகாப்டர்களுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

நேபாளத்தில் நிலநடுக்கத்தால் 6,204 பேர் இறந்துள்ளதாகவும், 13,932 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

ஆதாரம் : BBC /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.