2015-05-01 16:32:00

Jazz இசை மக்களிடையே புரிதலையும் மதிப்பையும் ஊக்குவிக்கிறது


மே,01,2015. ஒருவரையொருவர் மதிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் சக்திவாய்ந்த கருவியாக இருப்பது இசை என்று, யுனெஸ்கோ இயக்குனர் இரினா பொக்கோவா அவர்கள் கூறினார்.

ஏப்ரல் 30, இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக Jazz இசை நாளையொட்டி வெளியிட்ட செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள பொக்கோவா அவர்கள், Jazz இசை, அமைதியின் இசை என்பதால், இக்கால உலகில் பரவி வரும் புதிய வடிவ வெறுப்புணர்வு, இனவெறி, பாகுபாடு போன்றவற்றுக்கு எதிராகச் செயல்பட்டு, உலகினரை உறுதிப்படுத்த இக்காலத்தில் Jazz இசை மிகவும் முக்கியம் என்று கூறினார்.

Jazz என்றால், பிறரைப் புரிந்துகொள்வதாகும், பிறரைப் பேச அனுமதித்து பிறர் சொல்வதை மதிப்போடு கேட்பதாகும் என்றும், Jazz என்றால் துணிச்சலாகும், ஒருமைப்பாட்டுணர்வில் விடுதலை வாழ்வுக்கு அழைப்பு விடுப்பதாகும் என்றும் கூறினார் யுனெஸ்கோ இயக்குனர்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.