2015-04-29 15:28:00

கடுகு சிறுத்தாலும்... : பசியாற உதவிடு... பின்னரே, போதனை செய்


புத்தரின் சீடர் ஒருவர், ஒரு பிச்சைக்காரருக்கு போதனை செய்தார். ஆனால், அதை அவர் காதில் வாங்கவில்லை. சீடருக்குக் கோபம் வந்தது. புத்தரிடம் போய் சொன்னார். ''அந்தப் பிச்சைக்காரரை என்னிடம் அழைத்துவா'' என்றார் புத்தர். அவ்வாறே செய்தார் சீடர். பிச்சைக்காரரைப் பார்த்தார் புத்தர். உடல் மெலிந்து, பல நாளாகப் பட்டினி கிடந்து பசியோடு காணப்பட்டார் அவர். புத்தர், அவருக்கு வயிறு நிறைய உணவு கொடுத்தார். பின்பு, ''நீ போகலாம்'' என்று அனுப்பிவிட்டார். சீடருக்குப் பொறுக்கவில்லை. ''நீங்கள் அவருக்கு உணவு மட்டும்தானே அளித்தீர்கள். போதனை ஏதும் செய்யவில்லையே?'' என்று கேட்டார். ''இன்று அவருக்கு உணவுதான் போதனை. அதுவே அவருக்கு இப்போது முதல் தேவை. அவர் உயிரோடு இருந்தால்தான் நாளை போதனையைக் கேட்பார். பசித்தவருக்கு என்ன சொன்னாலும் பயன்படாது'' என்றார் புத்தர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.