2015-04-27 16:37:00

கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் தோழமை உணர்வு


ஏப்.26,2015. நேபாளத்திலும், அண்டை நாடுகளிலும் கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் தனது தோழமை உணர்வை இஞ்ஞாயிறன்று மீண்டும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப் பின்னர்,  வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த ஏறக்குறைய எழுபதாயிரம் திருப்யணிகளிடம், இப்பேரிடரால் துன்புறுவோருக்காகச் செபிக்குமாறு  கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரும் உதவிகள் பெறுவார்களாக எனச் சொல்லி, அன்னைமரியிடம், அனைவரோடும் சேர்ந்து, அருள்நிறைந்த மரியே என்ற செபத்தைச் செபித்தார் திருத்தந்தை.

நேபாளத்தில் இப்பேரிடர் நடந்த, கடந்த சனிக்கிழமையன்றே, நேபாள தலத்திருஅவைத் தலைவர் ஆயர் Paul Simick அவர்களுக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் தந்திச் செய்தி ஒன்றை அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.