2015-04-24 15:29:00

கடுகு சிறுத்தாலும்... : முயன்றால் முடியாதது எது?


அந்த ஊரில் இருவர் வாழ்ந்து வந்தனர். ஒருவர் படிப்படியாக நன்றாக உயர்ந்து உயர்ம‌ட்டத்திற்குச் சென்றார். மற்றவரோ, எதைத் தொட்டாலும் தோல்வியையேக் கண்டார். தோல்வியடைந்தவருக்கோ காரணம் புரியவில்லை. ஒருநாள், அவர், அந்த வெற்றி வீரரிடம் சென்று, “ நீங்கள் எப்படி வெற்றி பெறுகிறீர்கள்?. என்னால் முடியவில்லையே” என்று கேட்டார். அதற்கு அவர் சொன்னார்: “நான் இளைஞனாக இருந்தபோது, பத்து காரியங்கள் செய்தால், அவற்றில் ஒன்பது, தோல்வி அடைந்ததைப் பார்த்தேன். என்னுடைய வாழ்க்கையில் தோல்வி அடைவதை நான் விரும்பவில்லை. ஒன்பது தடவை வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தபோது, எனக்கு ஓர் உண்மை பளிச்சென்று விளங்கியது. தொண்ணூறு முறை முயன்றால், ஒன்பது தடவை வெற்றி கிடைக்கும் என்பதுதான் அது. ஆகவே, முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக்கொண்டேன்” என்று.

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி, இவற்றிற்கு மேலாக, அன்பு... இவையே வெற்றிக்கானப் படிகள் என்பார், சுவாமி விவேகானந்தர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.