2015-04-22 16:54:00

கல்வியில் கிறிஸ்தவர்களின் பங்கு புறக்கணிக்கப்படக் கூடாது


ஏப்.22,2015. இந்தியாவில் கிறிஸ்தவர்கள் கல்விக்கு ஆற்றிவரும் சேவையைப் புறக்கணிக்க முடியாது என்று இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் கூறினார்.

கேரளாவின் கோட்டயத்திலுள்ள ஆர்த்தடாக்ஸ் இறையியல் கல்லூரியின் 200ம் ஆண்டு நிறைவு நினைவாக இச்செவ்வாயன்று தபால் தலையை வெளியிட்டு உரையாற்றிய பிரணாப் முகர்ஜி அவர்கள், கல்வியில் கிறிஸ்தவர்களின் பங்கு புறக்கணிக்கப்படக் கூடாது எனக் கூறினார்.

குருத்துவக் கல்லூரி மற்றும் அதன் தலைவர்களின் மேற்பார்வையில் கேரளாவில் கிறிஸ்தவ சமூகம் பெருமெண்ணிக்கையில் ஆரம்பப் பள்ளிகளைத் தொடங்கியுள்ளது என்று, குடியரசுத் தலைவர் மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் கூறினார் பிரணாப் முகர்ஜி அவர்கள்.

ஏறக்குறைய 14 நூற்றாண்டளவாக கேரளாவில் இந்துக்களும், கிறிஸ்தவரும், முஸ்லிம்களும் ஒருவர் மற்றவரின் மத நம்பிக்கைகளை மதித்து, அமைதியிலும் நல்லிணக்கத்திலும் வாழ்ந்து வருகின்றனர் என்றும் கூறினார் இந்திய குடியரசுத் தலைவர்.

ஆதாரம்  : Day and night news / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.