2015-04-21 15:15:00

வருகிற ஜூன் 21ல் தூரின் நகரில் திருத்தந்தை


ஏப்.21,2015. “நாம் இப்பூமியைப் பாதுகாக்க வேண்டும், அதன் மூலம் இறைவன் விரும்பியபடி, இப்பூமி, முழு மனித சமுதாயத்துக்கும் வாழ்வின் ஊற்றாக அமையும்” என்பதை, இச்செவ்வாயன்று தனது டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இஸ்பானிய மறைப்பணியாளரான பிரான்சிஸ்கன் அருள்பணியாளர் Junipero Serra அவர்களை, வருகிற செப்டம்பர் 23ம் தேதி வாஷிங்டனில் புனிதராக அறிவிப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வருகிற மே 2ம் தேதி உரோம் வட அமெரிக்க கல்லூரியில் இடம்பெறும் அருள்பணியாளர் Junipero Serra அவர்களின் வாழ்வு குறித்து தியானிக்கும் ஒருநாள் செப நிகழ்விலும் திருத்தந்தை கலந்துகொள்வார்.

1700களில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிஃபோர்னியாவில் கத்தோலிக்க மறைப்பணித் தளங்களை அமைத்தவர் அருள்பணியாளர் Junipero Serra.

மேலும், ஏப்ரல் 19, கடந்த ஞாயிறன்று தூரின் நகரில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள, இறந்த இயேசுவின் உடலைப் போர்த்தியிருந்த திருப்போர்வையைப் பார்ப்பதற்கு வருகிற ஜூன் 21ம் தேதி தூரின் செல்லவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு கிறிஸ்துவில் இறைவனின் இரக்க முகத்தைக் காணவும், பிறரின் குறிப்பாக, அதிகமாகத் துன்புறுவோரின் முகங்களில் இயேசுவைக் காணவும் இப்பக்திமுயற்சி உதவும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.