2015-04-18 15:22:00

பாதுகாப்பான டிஜிட்டல் உலகத்தை உருவாக்க அழைப்பு


ஏப்.18,2015. உலகில் அதிகரித்து வரும் சைபர் கிரைம் எனப்படும் இணையதளம் சார்ந்த குற்றச்செயல்களைத் தடைசெய்வதற்கான முயற்சிகள் அதிகரிக்கப்பட்டு, பாதுகாப்பான டிஜிட்டல் உலகம் உருவாக்கப்பட வேண்டுமென குற்றத்தடுப்பு குறித்த ஐ.நா. கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டது. 

தோஹாவில் நடைபெற்றுவரும், குற்றத் தடுப்பு மற்றும் குற்ற நீதி குறித்த 13வது ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றிய, போதைப்பொருள் மற்றும் குற்றம் குறித்த ஐ.நா. அலுவலகத்தின் திட்டமிட்ட குற்றம் மற்றும் சட்டத்துக்குப் புறம்பேயான போதைப்பொருள் வணிக அமைப்பின் தலைவர் Loide Lungameni அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்

இணையதளம் சார்ந்த குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதால் அண்மை எதிர்காலத்தில் இக்குற்றங்கள் ஏற்படுத்தும் பாதிப்பு கற்பனைக்கு எட்டாததாய் இருக்கும் என்றும் Lungameni அவர்கள் எச்சரித்தார்.

உலகில் இணையதளம் சார்ந்த குற்றங்களால் 43 கோடியே 10 இலட்சத்துக்கு மேற்பட்ட வயதுவந்தோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, UNODC என்ற ஐ.நா.வின் போதைப்பொருள் மற்றும் குற்றம் குறித்த அலுவலகம் கூறியுள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த ஐ.நா. கூட்டம், வருகிற ஞாயிறன்று நிறைவடையும்.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.