2015-04-17 16:33:00

சிறைகளின் கொள்ளளவைவிட கைதிகளின் எண்ணிக்கை மிக அதிகம்


ஏப்.17,2015. உலகெங்கும் சிறைகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளவேளை, பல நாடுகளில் சிறைகளின் கொள்ளளவைவிட கைதிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என்று, குற்றத் தடுப்பு குறித்த ஐ.நா. கூட்டமொன்றில் கூறப்பட்டது.

தோஹாவில் நடைபெற்றுவரும், குற்றத் தடுப்பு மற்றும் குற்ற நீதி குறித்த 13வது ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றிய, போதைப்பொருள் மற்றும் குற்றம் குறித்த ஐ.நா. அதிகாரி  Piera Barzano அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

சிறைகளில், அவற்றின் கொள்ளளவைவிட கைதிகள் பெருமளவில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது நீதி அமைப்பின் மோசமான நிர்வாகத்தையே காட்டுகின்றது  என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டில் 77 நாடுகளில் சிறைகளின் கொள்ளளவைவிட கைதிகளின் எண்ணிக்கை 120 விழுக்காடு அதிகமாக இருந்தது, சில சிறைகளில் இது ஏறக்குறைய 400 விழுக்காடு என்றும் Barzano அவர்கள் தெரிவித்தார்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த ஐ.நா. கூட்டம், வருகிற ஞாயிறன்று நிறைவடையும்.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.