2015-04-17 16:27:00

உலகில் 60%க்கும் மேற்பட்டவர்களிடம் சமய உணர்வு உள்ளது


ஏப்.17,2015. உலக மக்கள் தொகையில் அறுபது விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்கள் சமய உணர்வு கொண்டவர்கள் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது.  

Gallup பன்னாட்டு அமைப்பின் உறுப்பினர்கள், 65 நாடுகளின் 63 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களிடம் பேசியதில் இவ்வாறு தெரியவந்துள்ளது.

எனினும், இந்தக் கணிப்பு ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் எடுக்கப்படவில்லை எனக் கூறும் இந்த ஆய்வு, உலகில் சமய உணர்வு கொண்டவர்களின் எண்ணிக்கை 90 விழுக்காட்டுக்கும் அதிகமாகக் கூடும் என்றும் தெரிவிக்கின்றது. 

மேற்கு ஐரோப்பாவிலும், ஓசியானியாவிலும் சமய உணர்வு குறைவாகவே உள்ளது என்றும் கூறும் அந்த ஆய்வு, சமய உணர்வு அதிகமாக உள்ள தாய்லாந்தில் 94 விழுக்காட்டினர் ஏதாவது ஒரு மதத்தைப் பின்பற்றுகின்றனர் என்றும் கூறுகிறது.

ஆதாரம் : IANS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.