2015-04-16 16:56:00

கத்தோலிக்க உலகின் புள்ளிவிவர நூல் வெளியீடு


ஏப்.16,2015. திருப்பீடத்தின் 2015ம் ஆண்டிற்குரிய தகவல் நூலும், 2013ம் ஆண்டிற்குரிய கத்தோலிக்க உலகின் புள்ளிவிவர நூலும் இவ்வியாழனன்று வெளியாயின.

உலகெங்கும் பரவியுள்ள 2989 மறைமாவட்டங்களின் புள்ளிவிவரங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

2005ம் ஆண்டிற்கும், 2013ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில், உலகெங்கும் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை, 13 கோடியே 90 இலட்சம் என்ற அளவு உயர்ந்துள்ளது.

உலக மக்கள் தொகையில், கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை, 17.3 விழுக்காட்டிலிருந்து, 17.7 விழுக்காடு என உயர்ந்துள்ளது.

இந்த எண்ணிக்கை உயர்வின் பெரும்பகுதி, ஆப்ரிக்க நாடுகளையேச்சாரும். 2005ம் ஆண்டு, ஆப்ரிக்க நாடுகளில், 15 கோடியே 30 இலட்சம் என்ற அளவில் இருந்த கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை, 2013ம் ஆண்டு, 20 கோடியே, 60 இலட்சம் என்ற அளவு உயர்ந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில், பெரும் ஏற்றமோ, இரக்கமோ இன்றி, கடந்த எட்டு ஆண்டுகளில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை ஒரே நிலையில் உள்ளது என்று இந்தப் புள்ளிவிவர நூல் குறிப்பிட்டுள்ளது.

கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை, அமெரிக்க நாட்டின் மக்கள் தொகையில் 63 விழுக்காடு என்ற அளவில் நிலைபெற்றுள்ளது என்றும், ஆசியாவில், 2005ம் ஆண்டு 2.9 விழுக்காடு இருந்த கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை, 2013ம் ஆண்டு 3.2 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.