2015-04-16 13:45:00

கடுகு சிறுத்தாலும் – பார்வைகள் பலவிதம்


அன்று தெருவில் ஏழை ஒருவர் நடந்து போய்க்கொண்டிருந்தார். அவர் பாதையில்  வாழைப்பழத் தோல் கிடந்ததைக் கவனிக்காமல் அதில் வழுக்கி விழுந்தார். இதைப் பார்த்தவர்கள், அறிவு கெட்டவன், கவனிச்சு போகக் கூடாது, கண்ணை எங்கே வைச்சுக்கிட்டு நடக்கிறான் என்று வசை பாடினார்கள். சிறிதுநேரம் சென்று பணக்கார இளைஞன் ஒருவன் அதே பாதையில் நடந்து சென்றான். அவனும் வாழைப்பழத் தோலைக் கவனிக்காமல் அதில் வழுக்கி விழுந்தான். உடனே பக்கத்தில் இருந்தவர்கள், எவனோ அறிவு கெட்டவன், வாழைப்பழத்தைச் சாப்பிட்டுவிட்டு, தோலை ரோட்ல போட்டிருக்கான் என்று, வாழைப்பழத் தோலைப் போட்டவரைத் திட்டினார்கள். ஆம். பார்வைகள் பலவிதம். ஏழை மீது ஒரு பார்வை, செல்வந்தர் மீது ஒரு பார்வை.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.