2015-04-14 15:42:00

செவ்வாய்க் கோளத்தில் நீர் இருப்பதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு


ஏப்.14,2015. நான்கு ஆண்டுகளுக்கு மேலாக செவ்வாய்க் கோளத்தை ஆராய்ந்து வரும் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் தற்போது அங்கு திரவ நிலையில் நீர் இருப்பதற்கான ஆதாரத்தைக் கண்டறிந்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நீரானது செவ்வாயில் காணப்படும் Perchlorate எனும் வேதியப் பொருளினால் வளிமண்டலத்திலுள்ள நீராவியை உறிஞ்சுவதால் சேமிக்கப்பட்டிருக்கலாம் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர இங்குள்ள திரவங்கள் -70 டிகிரி செல்சியஸ் எனும் வெப்பநிலையில் உறைந்து மிகவும் குளிர்ச்சியாக இருக்கலாம் எனவும், இதனால் நுண்ணுயிர்கள் வாழும் சாத்தியம் இருப்பதாகவும் மேலும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.