2015-04-10 15:25:00

வெனிஸ் 2015 கலை அருங்காட்சியகத்திற்குத் திருப்பீடம்


ஏப்.10,2015. இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெறவுள்ள 56வது அனைத்துலக கலை அருங்காட்சியகத்தில் வைப்பதற்கென திருப்பீடக் கண்காட்சி கூடாரம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வருகிற மே 9ம் தேதியிலிருந்து நவம்பர் 22ம் தேதி வரை நடைபெறும் இந்த 56வது அனைத்துலக கலை அருங்காட்சியகத்தில் வைப்பதற்கென திருப்பீடம் தயாரித்துள்ள  கண்காட்சி கூடாரம், மூன்று நாடுகளைச் சேர்ந்த மூன்று இளம் கலைஞர்களின் கைவண்ணத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

கொலம்பிய நாட்டு Monika Bravo; மாசிடோனிய நாட்டு Elpida Hadzi-Vasileva; மொசாம்பிக் நாட்டுப் புகைப்பட கலைஞர் Mário Macilau ஆகிய மூன்று கலைஞர்கள் இந்த அலங்கார கண்காட்சி கூடாரத்தை அமைத்துள்ளனர்.

இக்கண்காட்சி கூடாரத்தை இவ்வியாழனன்று செய்தியாளர்களிடம் அறிமுகம் செய்து வைத்து விளக்கிய கர்தினால் ஜான்பிராங்கோ ரவாசி அவர்கள், “தொடக்கத்தில்.......வாக்கு மனிதரானார்” என்ற தூய யோவான் நற்செய்தியாளரின் திருச்சொற்களைத் தலைப்பாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த வெனிஸ் அனைத்துலக கலை அருங்காட்சியகம் நடத்தப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.