2015-04-09 14:44:00

கடுகு சிறுத்தாலும் – மாறியது நெஞ்சம்


தனது வீடு அழகாக இல்லை என்று நினைத்த ஒரு மனிதர் வேறு ஒரு கிராமம் சென்றார். அங்கும் எல்லா இடங்களிலும் குப்பைக் கூளங்கள் குவிந்து கிடந்தன. அதனால் காட்டுக்குச் சென்று ஒரு மரத்தடியில் அமர்ந்தார் அம்மனிதர். அப்போது அவர் தலையில் ஒரு பறவையின் எச்சம் விழுந்தது. மிகுந்த எரிச்சலுடன் அருகிலிருந்த ஓடையில் இறங்கினார். அங்கு பெரிய மீன் ஒன்று சிறிய மீன் ஒன்றைக் கவ்வித் தின்று கொண்டிருந்தது. இதைப் பார்க்கவே அவருக்கு அருவருப்பாக இருந்தது. சே.. இந்த உலகமே அசிங்கம்தானா என்று எண்ணியபடியே தீ மூட்டி அதில் விழுந்து சாகத் தயாரானார். அப்போது அவ்வழியே சென்ற வழிப்போக்கர் ஒருவர், ஐயா, உங்களுடைய உடலில் உள்ள சதையெல்லாம் எரியத் தொடங்கினால் இங்கே துர்நாற்றம் தாங்க முடியாது. அதை எண்ணிப் பாருங்களேன் என்றார். அப்போது அம்மனிதர், எல்லாம் அருவருப்பானது, எல்லாமே மோசம் என்று எண்ணி எல்லாவற்றையும் ஒதுக்கினால் ஒன்றுமே நடைபெறாது என்ற உண்மையைப் புரிந்துகொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.