2015-03-30 16:50:00

கூட்டு இராணுவப் படை அமைக்க அரபுத் தலைவர்கள் இணக்கம்


மார்ச்,30,2015. ‘'எதிர்பாராத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நோக்கில், அரபுலகத் தலைவர்கள் கூட்டு இராணுவப் படை ஒன்றை உருவாக்க இணங்கியுள்ளதாக எகிப்து அதிபர் அப்துல் ஃபட்டா எல்-ஸீஸீ கூறினார்.

அரபுப்பகுதியில் எதிர்நோக்கப்படும் 'எதிர்பாராத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விதத்தில் இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

யேமனில் நிலவும் குழப்பங்கள் தொடர்பாக ஆராயப்பட்ட அரபு லீக் மாநாட்டில் இந்த உடன்பாடு காணப்பட்டுள்ளது.

யேமனில் தற்போது ஹெளதி- ஷியா முஸ்லிம் கிளர்ச்சியாளர்களை இலக்குவைத்து சவுதி அரேபியா தலைமையிலான கூட்டு அரபுப் படையினர் தாக்குதல் நடத்திவருகின்றனர்.

ஹௌதிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு தாங்கள் கைப்பற்றியிருக்கும் நிலப்பகுதியிலிருந்து வெளியேறும்வரை படைநடவடிக்கை தொடரும் என்று அரபு லீக் கூறியுள்ளது. 

ஆதாரம் : BBC/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.