2015-03-18 16:42:00

எபோலா நோய் நெருக்கடியைக் களைவதில் திருப்பீடம்


மார்ச்,18,2015. எபோலா நோய் நெருக்கடியைக் களைவதற்கு கத்தோலிக்கத் திருஅவை தன் அர்ப்பணத்தைத் தொடர்கிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் எபோலா நோயினால் உருவாகியுள்ள ஆழமான தாக்கங்களைக் களைவதற்கு, கத்தோலிக்கத் திருஅவை தன் பணிகளை அர்ப்பண உணர்வுடன் தொடர்கிறது என்பதை மகிழ்வுடன் அறிவிக்கிறேன் என்று, திருப்பீட நீதி, அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்த நோய் களையும் பணிக்கென 5 இலட்சம் யூரோக்கள் தொகையை திருப்பீடம் அறிவித்துள்ளதென்று கர்தினால் டர்க்சன் அவர்கள் அறிவித்துள்ளார்.

இந்த உதவித் தொகையின் 50 விழுக்காடு, மருத்துவ உதவிகளாகவும், 30 விழுக்காடு, நோயுற்ற குழுமங்களின் மறுவாழ்வுக்காகவும், 20 விழுக்காடு, ஆன்மீக, மற்றும் மேய்ப்புப்பணி முயற்சிகளுக்காகவும் பயன்படுத்தப்படும் என்று திருப்பீட நீதி, அமைதி அவை அறிவித்துள்ளது.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.