2015-03-17 15:44:00

கடுகு சிறுத்தாலும்... துன்புறுத்தும் ஒளி


பாலை நிலத்தைக் கடந்துகொண்டிருந்தார் ஒரு வழிபோக்கர். இரவாகிவிட்டதால், அங்கேயே கூடாரம் அடித்துத் தங்கினார். நள்ளிரவில் திடீரென அவருக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது. அவர் வைத்திருந்த ஒரு சிறு மூட்டையில் அத்திப் பழங்கள் இருந்தன. விளக்கை ஏற்றினார்; அத்திப்பழ மூட்டையை அவிழ்த்தார். முதல் பழத்தை எடுத்துக் கடித்தபோது, பழத்துக்குள் இருந்து பூச்சி ஒன்று வந்ததைப் பார்த்தார். எனவே, அந்தப் பழத்தைத் தூக்கி எறிந்தார். அடுத்தப் பழத்தைக் கடித்தார். அதற்குள்ளிருந்தும் பூச்சி வந்ததைப் பார்த்தார். விளக்கிற்கு அருகே கொண்டு சென்று ஆராய்ந்தார். பூச்சி நன்றாகவேத் தெரிந்தது. அதையும் தூக்கி எறிந்தார். அடுத்தப் பழத்தை எடுத்து விளக்கின் அருகே கொண்டு செல்லும்போதே, உள்ளுக்குள் இருந்த பூச்சி வெளியே வருவது தெரிந்தது. இப்படியே போனால், தான் சாப்பிட ஒரு பழமும் இருக்காது என்று அவர் உணர்ந்தார். உடனே அவருக்கு ஓர் எண்ணம் எழுந்தது. விளக்கை அணைத்து விட்டு, மீதிப் பழங்களை இருளில் சாப்பிட்டு முடித்தார்.

இருளுக்கு அதிகம் பழகிவிட்டால், ஒளி நம்மைத் துன்புறுத்தும். மனசாட்சி என்ற விளக்கை அணைத்துவிட்டால், பூச்சியும், புழுவும் மண்டிக்கிடக்கும் நம் எண்ணங்கள், சரியென்றே தோன்றும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.